சர்வதேச பெண்கள் தினம் பெண்களுக்கு அதிகாரம் வழங்க அரசு தொடர்ந்து பணியாற்றும்: பிரதமர் வாழ்த்து

புதுடெல்லி: ‘’பெண்களுக்கு அதிகாரம் வழங்க அரசு தொடர்ந்து உழைக்கும்,’’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், `` சர்வதேச பெண்கள் தினத்தில், சாதனை படைத்த பெண்களுக்கு மரியாதை. நாட்டின் முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்பை நினைத்து பெருமிதம் கொள்கிறோம். பெண்களுக்கு அதிகாரம் வழங்க அரசு தொடர்ந்து உழைக்கும் என்று `புதிய இந்தியாவுக்கான பெண்களின் அதிகாரம்’ என்ற ஹேஷ்டேக்கில் கூறியுள்ளார்.  மேலும், ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் இடம் பெற்ற சாதனை பெண்களின் பட்டியல் தொகுப்பையும் வீடியோவாக வெளியிட்டார்.  

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ``பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு சிறந்த திட்டங்களின் மூலம் பெண்களுக்கு அதிகாரம் வழங்க செயலாற்றி வருகிறது. உலகின் மிக உயரமான போர் களமான சியாச்சின் முதல், போர் கப்பல்கள் வரை இந்திய பெண்கள் தடைகளை மீறி ஆயுதப்படையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுகின்றனர்,’’ என்று அவருடைய டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நம் நாட்டு பெண்களின் முயற்சிகள் மற்றும் சாதனைகளைப் பாரட்டிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ``தற்சார்பு இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் பெண்களின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது,’’ என்று தெரிவித்தார்.

Related Stories: