போதையில் ஓசி சிகரெட் கேட்டு பெண்ணை தாக்கிய அதிமுக பிரமுகர் கைது

மேட்டுப்பாளையம்:  போதையில் ஓசி சிகரெட் கேட்டு பெண்ணை தாக்கிய அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம் காரமடை, பெரியபுத்தூர் பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த குணசீலன் (53). இவரது கடையில் அதிமுகவை சேர்ந்த, அன்னூர் ஒன்றியம் வடவள்ளி ஊராட்சி  துணைத்தலைவர் பாலு என்ற பாலசுப்ரமணியம் (42) நேற்று முன்தினம் மது போதையில் சிகரெட் கேட்டுள்ளார். அதற்கு குணசீலன் மனைவி பணம் கேட்டுள்ளார்.

உடனே துணைத்தலைவரிடமே பணம் கேட்கிறாயா? என்று தகாத வார்த்தைகளால் பேசியதோடு அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். மேலும், கடையில் உள்ள பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தினார். இதை அருகில் இருந்த பேக்கரி உரிமையாளர்  தட்டி கேட்டபோது அவரையும் தகாத வார்த்தைகளால் பேசியதோடு, பேக்கரியில் இருந்த சேர் மற்றும் கண்ணாடிகளை உடைத்து சூறையாடினார். புகாரின்பேரில் காரமடை போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து பாலசுப்ரமணியத்தை கைது செய்தனர்.

Related Stories: