×

அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட விஜயகாந்த்துக்கு எதிரான அவதூறு வழக்கை திரும்ப பெற அனுமதி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு எதிராக, அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட செய்யப்பட்ட அவதூறு வழக்கை திரும்பப் பெற அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக, கடந்த 2016ம் ஆண்டு அப்போதைய அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு எதிரான அவதூறு வழக்குகளை வாபஸ் பெறுவது தொடர்பாக கடந்த 2021 ஆகஸ்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற சிறப்பு நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்களின் அனுமதியை பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரி மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, விஜயகாந்த் மீதான வழக்கு நிதி சம்பந்தப்பட்டது அல்ல. அவதூறு வழக்கு என்பதால் அதை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என்று மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்து உத்தரவிட்டனர்.



Tags : Vijayakanth ,AIADMK ,Madras High Court , Allowed to withdraw defamation case against Vijayakanth during AIADMK rule: Madras High Court orders
× RELATED அதிமுகவின் சின்னம், கொடியை பயன்படுத்த...