×

ஓட்டுநர்களுக்கு ரூ.1000 நிவாரணம் என்கின்ற தகவல் தவறானது: போக்குவரத்து துறை மறுப்பு

சென்னை: தமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம் என்ற பெயரில்  சமூக வலைத்தளங்களில் ஓட்டுநர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்ற  செய்தி தவறானது என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு  ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம், சென்னை-34 என்ற பெயரில்  வெளியிடப்பட்ட விளம்பரத்தில் தமிழக அரசு அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும்  நிவாரணத் தொகை ரூ.1000 வழங்கப்பட இருப்பதாகவும், அதனை பெறுவதற்கு உரிய  ஆவணங்களை அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் சமர்ப்பித்தால்  அவர்களது  வங்கி கணக்கில் ரூ.1000 நிவாரணத் தொகை செலுத்தப்படும் என தமிழக  அரசு அறிவித்துள்ளதாக உண்மைக்கு புறம்பான செய்தி சமூக வலைதளங்களில்  பகிரப்பட்டு வருகிறது. இதுபோன்ற அறிவிப்பு எதுவும் தமிழ்நாடு அரசால்  வெளியிடப் படவில்லை. இது தவறான தகவல் ஆகும் என இதன் மூலம் தெரிவித்துக்  கொள்ளப்படுவதுடன்  இதனை  நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என கேட்டுக்  கொள்ளப்படுகிறது.  இதுபோன்ற தவறான தகவலை பரப்பும் நபர்கள் மீது காவல் துறை  மூலமாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம்  எச்சரிக்கப்படுகிறது.



Tags : Transport Department , Information about Rs 1000 relief for drivers is wrong: Transport Department denies
× RELATED தேர்தலில் வாக்களிப்பதற்காக 2...