கொளத்தூர் பெரியார் நகரில் ரூ.71.81 கோடி மதிப்பில் பன்னோக்கு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: கொளத்தூர் பெரியார் நகரில் ரூ.71.81 கோடி மதிப்பில் பன்னோக்கு மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதிநவீன வசதிகளுடன் 3 அடுக்குகளாக பன்னோக்கு மருத்துவமனை கட்டப்பட உள்ளது. மகப்பேறு, அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை கூடம், ரத்த வங்கி உள்ளிட்ட வசதிகளுடன் மருத்துவமனை அமைகிறது. பன்னோக்கு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக சிகிச்சை பிரிவு அமைக்கப்பட உள்ளது.

Related Stories: