டெல்லி காந்தி நினைவிடத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தியானம்: அமைச்சர்கள் கைதை கண்டித்து டெல்லி முதல்வர் போராட்டம்

டெல்லி: ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லி ராஜ்கட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்கள் தியானம் மேற்கொண்டனர். மதுபான ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியவை சிபிஐ கைது செய்தது. அதே போல மற்றொரு அமைச்சர் சத்யேந்திர ஜெயின் சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஒன்றிய அரசு விசாரணை ஏஜென்சிகளை தங்கள் அமைச்சர்களுக்கு எதிராக பயன்படுத்தி வருவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றசாட்டியிருந்தார் .

ஒன்றிய அரசின் இந்த போக்க கண்டித்த அவர் ஹோலி பண்டிகை அன்று நாட்டின் நலன் கருதி தியானம் மற்றும் பூஜையில் ஈடுபடப்போவதாக தெரிவித்திருந்தார். பிரதமர் இந்த நாட்டிற்கு நல்லது எதுவும் செய்யவில்லை என்று கருதினால் நீங்களும் ஹோலி கொண்டாட்டத்திற்கு பிறகு நாட்டின் நலனுக்காக பிராத்திக்கலாம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அதன்படி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு தியானத்தை தொடங்கினார் . முன்னதாக நாட்டை கொள்ளையடித்தவர்கள் இங்கிருந்து தப்பு ஓடி விட்டதாகவும், நாட்டின் நலனுக்காக பாடுபட்ட அமைச்சர்கள் புலனாய்வு ஏஜென்சிகளால் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். 

Related Stories: