×

மாசி மாத பவுர்ணமியையொட்டி பர்வதமலை சிவன் கோயிலில் விடிய விடிய பக்தர்கள் தரிசனம்-23 கி.மீ தூரம் கிரிவலம் சென்றனர்

கலசபாக்கம் : மாசி மாத பவுர்ணமியொட்டி பர்வத மலையில் உள்ள சிவன் கோயிலில் விடிய விடிய பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென் மகாதேவ மங்கலம் கிராமத்தில் உள்ள பர்வத மலையில் பிரம்மராம்பிகை சமேத மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் உள்ளது 4,560 அடி உயர மலையில் அமைந்துள்ள இக்கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். மேலும் 23 கிலோமீட்டர் தூரமுள்ள கிரிவலப் பாதையில் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு மாசி மாத பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். அவர்கள் கோயில் மாதிமங்கலம் கிராமத்தில் உள்ள கரைக்கண்டீஸ்வரர் கோயிலில் தொடங்கி வேடப்புலி பட்டியந்தல், கடலாடி, வெள்ளந்தாங்கீஸ்வரர், வடகாளியம்மன் கோயில் வழியாக விடிய விடிய கிரிவலம் வந்து மலையேறி சென்று காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.  திங்கட்கிழமைகளில் கிரிவலம் வந்தால் பதவி கிட்டும்.

செவ்வாய்க்கிழமை கிரிவலம் வந்தால் பகைவரை எளிதில் வெல்லலாம் என்பது ஐதீகம்.  இதையொட்டி நேற்று முன்தினம் மாலை முதல் விடிய விடிய பக்தர்கள் கிரிவலம் வந்தனர். மேலும் பக்தர்களுக்கு தைரியத்தை ஏற்படுத்திட மலையடிவாரத்தில் வீரபத்திரன் கோயிலில் சக்தி கயிறுகள் கட்டப்பட்டது. அதேபோல் தடை செய்யப்பட்ட பொருட்களை பக்தர்கள் யாரேனும் கொண்டு செல்கிறார்களா என வனத்துறையினர்,இந்து சமய அறநிலைத்துறையினர் மற்றும் போலீசார் சோதனை நடத்தி அனுப்பி வைத்தனர்.

Tags : Masi ,Parvadamalai Shiva temple ,Krivalam , Kalasapakkam: During the full moon of the month of Masi, devotees wait for darshan at the Lord Shiva temple on Mount Parvada.
× RELATED அகிலாண்டேஸ்வரி கோயில் தளிகையுடன்...