ஜெயலலிதா மாதிரியான தலைவர் என்று சொல்ல அண்ணாமலைக்கு தகுதி இல்லை :மாஜி அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை :ஜெயலலிதா மாதிரியான தலைவர் என்று சொல்ல அண்ணாமலைக்கு தகுதி இல்லை என்று மாஜி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இணைவதால் அதிமுக - பாஜக கூட்டணியில் மோதல் வெடித்துள்ளது. இந்த நிலையில்,  சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கண்ணாடி அல்ல, சமுத்திரம், அந்த சமுத்திரம் மீது கல்லெறிய கூடாது. அசுர வேகத்தில் அதிமுக வளர்வதால் தானாக வந்து பிற கட்சியினர் சேர்கின்றனர்.

யாரையும் நாங்கள் இழுக்கவில்லை. அதிமுகவில் நிர்வாகிகள் இணைவதை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அணுகக்கூடாது. முகவரி இல்லாத அமர்பிரசாத் ரெட்டி போன்றவற்றின் கருத்துகளுக்கு நான் பதில் கூற விரும்பவில்லை. அதிமுக மீது கல்லெறிந்தால் அண்ணாமலை காணாமல் போவார்.நிர்வாகிகள் கட்சி மாறுவது வழக்கமானது தான் என்பதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி உருவப் படத்தை எரித்தவர்களை பாஜகவில் இருந்து நீக்க வேண்டும்.

அதிமுக தொண்டர்கள் பதிலடி கொடுத்தால் பாஜகவால் தாங்க முடியாது. ஜெயலலிதா போன்ற தலைவருடன் அண்ணாமலை தன்னை ஒப்பிட்டு பேசக்கூடாது. ஜெயலலிதா மாதிரியான தலைவர் என்று சொல்ல அண்ணாமலைக்கு தகுதி இல்லை.அண்ணாமலை எப்படி தலைவரானார் என்பது குறித்து விமர்சிக்க விரும்பவில்லை .ஒரு கட்சிக்கு மாநில தலைவர்களாக இருப்போர் எல்லாம் அரசியல் தலைவர்கள் ஆகிவிட முடியாது.அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என கூறிவிட்டு விமர்சிப்பது சரியானது அல்ல,என்றார்.

Related Stories: