×

மகளிர் தினம் மனிதகுலத்துக்கும் மனித உரிமைகளுக்கும் முக்கியமான நாள்: எத்திராஜ் மகளிர் கல்லூரி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்கி கொண்டிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தின கொண்டாட்ட நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையற்றினார். எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின கொண்டாட்ட நிகழ்வில் முதல்வர் முக ஸ்டாலின் சிறப்புரையற்றினார். அவர் கூறியதாவது , உலகத்தில் எந்நாளும் போற்றப்படக்கூடியவர்கள் பெண்கள்.பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட இயக்கம் திராவிட இயக்கம். மகளிர் தினம் மனிதகுலத்துக்கும் மனித உரிமைகளுக்கும் முக்கியமான நாள்.

மகளிரை வாழ்த்துவதன் மூலம் இந்த நாட்டை வாழ்த்துகிறோம். மன்னனையே கேள்வி கேட்கும் துணிச்சல் கண்ணகிக்கு இருந்தது. இடையில் ஏற்பட்ட பண்பாட்டு படையெடுப்பால் பெண்கள் முடக்கப்பட்டார்கள். முடக்கப்பட்ட பெண்களை மீட்க தொடங்கப்பட்ட இயக்கம் திராவிட இயக்கம். பெரியாருக்கு பெரியார் என்ற பட்டத்தை வழங்கியவர்கள் பெண்கள் தான். இலவச பேருந்து சலுகை என்பது மகளிருக்கான உரிமை. பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என தெரிவித்தார்.

Tags : Women's Day ,Chief Minister ,MK Stalin ,Ethiraj Women's College , Women's Day is an important day for humanity and human rights: Chief Minister MK Stalin's speech at Ethiraj Women's College function
× RELATED மகளிர் தின விழா கொண்டாட்டம்