×

டெல்லி மதுபான கொள்கை ஊழல் புகார் தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவின் மகள் கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் புகார் தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவின் மகள் கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் புகாரில் ஏற்கனவே அம்மாநில முன்னாள் துணை முதல்வர் சிறை சென்றுள்ள நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவின் மகள் கவிதாவு நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

 டெல்லி மதுபான கொள்கை ஊழல் புகார் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை சார்பாக தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறையை பொறுத்தவரையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையானது நடை[பெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சட்டப்பட்டவர்களில் ஒருவரான அமித் அரோவிடம் அண்மையில் நடந்த விசாரணையில் கவிதா பெயரும் இடம் பெற்றதால் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.

இந்த மதுபான கொள்கை ஊழல் புகாரில் கவிதா பெயர் இடம் பெற்றுள்ளதால் நாளை ஆஜராகி விளக்கமளிக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு இதே விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பாக டெல்லியில் மார்ச் 10-ம் தேதி மிகப்பெரிய போராட்டத்தை கவிதா சார்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அமலாக்கத்துறை அவருக்குசம்மன் அனுப்பியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.


Tags : Enforcement department ,Telangana ,Chief Minister ,Chandrasekhara ,Kavitha ,Delhi , Delhi Liquor Policy, Corruption Complaint, Telangana CM, Chandrasekhar Rao's Daughter Kavitha, Enforcement Department Summoned
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...