மும்பை: மகளிர் தினத்தையொட்டி, இன்று மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியை இலவசமாக நேரில் காணலாம். மும்பையில் நடைபெறும் குஜராத், பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு டிக்கெட் கிடையாது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆண்கள் ஐபிஎல் தொடர் போன்று பெண்களுக்கென பிரத்யேக மகளிர் பீரிமியர் லீக் இந்தாண்டு முதல் பிசிசிஐ நடத்தி வருகிறது. இந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்று வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
4ம் தேதி தொடங்கி வருகின்ற மார்ச் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இறுதிப்போட்டியானது மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தநிலையில் சர்வதேச மகளிர் தினத்தன்று நடைபெறும் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையேயான போட்டியை பெண்கள், சிறுமிகள் மற்றும் ஆண்கள் உள்பட அனைவரும் இலவசமாக காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மகளிர் பிரிமியர் லீக்கின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.