சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற கைதி முகமது சபி மீண்டும் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் இருந்த கைதி புளியந்தோப்பு முகமது சபி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, போலீசாருக்கு தெரியாமல் தப்பிச் சென்றார்.
