×

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்டது கூகுள் நிறுவனம்!!

டெல்லி : சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற கூற்று மலையேறி, இப்போது கல்வியில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்கி வருகின்றனர். ஆணுக்கு நிகராக வல்லமை காட்டி சமுதாயத்தை தங்களை நோக்கி அண்ணாந்து பார்க்க வைத்துள்ளனர் பெண்கள். அவர்களின் சாதனைகள் முழுமையாக அங்கீகரிக்கப்படவேண்டும், அனைவராலும் மதிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், 1975ம் ஆண்டு மார்ச் 8ம் நாளை  உலக மகளிர் தினமாக ஐ.நா. அங்கீகரித்தது. இன்று கொண்டாடப்படும் மகளிர் தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த கூகுள் நிறுவனம், பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் உள்ளிட்ட சிறப்பு நாட்களில் சிறப்பு டூடுலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் வாழும் பல்வேறு கலாசாரத்தைச் சேர்ந்த பெண்களைக் குறிப்பிடும் வகையில் இந்த டூடுல் அமைந்துள்ளது. மருத்துவம், விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் பெண்களை குறிக்கும் வகையிலான காட்சிகளும் இந்த டூடுலில் இடம்பெற்றுள்ளன.

Tags : Women's Day ,google , International Women's Day, Special Doodle, Google, Company
× RELATED மனவெளிப் பயணம்