வெடி மருந்துகளுடன் பிடிபட்ட வழக்கில் இலங்கை தமிழர் தேடப்படும் குற்றவாளி: சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: சென்னை பெரியமேட்டில் 2007ம் ஆண்டு க்யூ பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த 13 பேரை பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடம் வெடிகுண்டுகள் தயாரிக்கும் மூலப்பொருட்கள் 7.5 டன் அளவுக்கு இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், 13 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீனில் வந்தவர்களில் ஒருவரான திருச்சியை சேர்ந்த இலங்கை தமிழரான செல்வசேந்தன் (எ) சேந்தன் (34) என்பவர், வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராகாமல் இருந்து வந்தார். அவரை தேடப்படும் குற்றவாளியாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன் அறிவித்துள்ளார்.

Related Stories: