தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினராக தமிழகத்தை சேர்ந்த டாக்டர் ஆனந்த் நியமனம்

சென்னை: தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராக தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின்(என்சிபிசிஆர்) உறுப்பினராக தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் கடந்த 2018ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். இந்த நிலையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராக இரண்டாவது முறையாக ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பை ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராக டாக்டர் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அந்த பொறுப்பில்  மூன்று ஆண்டுகள்  அல்லது 60 வயது வரை அல்லது மறு உத்தரவு வரை பதவியில் நீடிப்பார்என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள ஆனந்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ மற்றும் பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: