×

மீனவ இளைஞர்கள் ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்: தாம்பரம் கமிஷனர் தகவல்

துரைப்பாக்கம்: தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் வெளியிட்ட அறிக்கை: தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட கடலோர கிராமங்களைச் சேர்ந்த மீனவ இளைஞர்கள் ஊர்க்காவல் படையில் சேர ஆள்சேர்ப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 18 வயது நிரம்பியவர்கள், 10ம் வகுப்பு படித்த தமிழகத்தைச் சேர்ந்த சேவை மனப்பான்மை கொண்ட தகுதியான மீனவ இளைஞர்கள், இம்மாதம் 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, காவல் உதவி ஆணையாளர், ஆயுதப்படை மற்றும் ஊர்க்காவல் படை, தாம்பரம் மாநகர காவல் ஆயுதப்படை, பதுவஞ்சேரி, சென்னை 600126 என்ற முகவரியில் நேரில் தொடர்புகொள்ளலாம். காவல் உதவி ஆணையாளர்-9498174876, ஊர்க்காவல் படைத் தளபதி பார்த்திபன் - 9884233744, ஊர்க்காவல் படை பிரிவு தலைவர் கோபால் - 9940098733 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.



Tags : Home Guard , Fishermen youth can apply to join Home Guard: Tambaram Commissioner informs
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்