நியூயார்க்: அமெரிக்காவில் சிறிய ரக சுற்றுலா விமானம் தீப்பிடித்து எரிந்த விபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் பலியானார். இந்திய வம்சாவளி பெண் ரோமா குப்தாவும்(63), அவரது மகள் ரிவா குப்தாவும்(33) கடந்த ஞாயிற்றுகிழமை, நியூயார்க்கை அடுத்த கிழக்கு பர்மிங்டேலில் உள்ள ரிபப்ளிக் விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக சுற்றுலா விமானத்தில் பயணம் செய்தனர்.
விமானம் லாங் ஐலேண்ட் குடியிருப்பு பகுதிகளுக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் இருந்து புகை வருவதாக விமானி தெரிவித்துள்ளார். சிறிது நேரத்திலேயே அந்த விமானம் தீப்பிடித்து எரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் ரோமா குப்தா சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். ரிவா குப்தாவும், விமானி பைசுல் சவுத்ரியும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.