3 பயிற்சி கப்பல்கள் மற்றும் 70 பயிற்சி விமானங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்து

புதுடெல்லி: இந்திய விமானப்படைக்கு ரூ.6,800 கோடியில் 70 பயிற்சி விமானங்களும், கடற்படைக்கு ரூ.3,100 கோடியில் 3 பயிற்சி கப்பலும் வாங்க சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 70 எச்டிடி-40 ரக விமானங்கள் வாங்க எச்ஏஎல் நிறுவனத்துடனும், 3 பயிற்சி கப்பல்களை தயாரிக்க எல் அன்ட் டி நிறுவனத்துடனும் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று ஒப்பந்ததத்தை இறுதி செய்தது. இதற்கான ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் கையெழுத்தானது. 70 பயிற்சி விமானங்களை எச்எல்ஏ நிறுவனம் அடுத்த 6 ஆண்டுகளில் வழங்கும். 3 கப்பல்கள் விநியோகிக்கும் பணி வரும் 2026 முதல் தொடங்கப்படும்.  

Related Stories: