அரையிறுதியில் பெங்களூரு எப்சி முன்னிலை

மும்பை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் அரையிறுதி-1 முதல்கட்ட போட்டியில், பெங்களூரு எப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எப்சி அணியை வீழ்த்தி முன்னிலை பெற்றது. மும்பை கால்பந்து அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், இரு அணிகளுமே தற்காப்பு ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தியதால் இடைவேளையின்போது 0-0 என சமநிலை நிலவியது. இரண்டாவது பாதியில் பெங்களூரு வீரர்கள் ஒருங்கிணைந்து விளையாடி கடும் நெருக்கடி கொடுத்தனர்.

இதன் பலனாக 78வது நிமிடத்தில் கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பை பயன்படுத்தி ரோஷன் வாகாக பந்தை பறக்கவிட சுனில் செட்ரி அதை அற்புதமாக கோலாக்கி அசத்தினார். பதில் கோல் அடிக்க மும்பை வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் பெங்களூரு எப்சி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி முன்னிலை பெற்றது. இந்த அணிகள் மீண்டும் மோதும் 2வது கட்ட அரையிறுதி ஆட்டம், பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் மார்ச் 12ம் தேதி நடக்க உள்ளது.

Related Stories: