அயோத்தி உண்மைக்கு நெருக்கமான கதை இயக்குனர் மந்திர மூர்த்தி பேட்டி

சென்னை: சசிகுமார், பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ள படம் அயோத்தி. படத்தை அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கியுள்ளார். அவர் கூறியது: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனிடம் எனது படத்திற்காக கதையை கேட்டேன். அவர் சொன்னதில் அயோத்தி கதையை படமாக உருவாக்கலாம் என்ற விருப்பம் ஏற்பட்டது. இதற்காக மதுரைக்கு சென்று அங்கிருந்த அரசு மருத்துவமனையில் ஆம்புலன்சில் இருந்த போன் நம்பருக்கு கால் செய்தேன். நேதாஜி ஹரிகிருஷ்ணன் என்பவர் பேசினார். வெளிமாநிலங்களிலிருந்து வந்து இறந்துபோன பலபேரை அவர் அவர்களின் சொந்த ஊருக்கு விமானத்தில் உடல்களை அனுப்பி வைத்திருக்கிறார். இந்த கேரக்டரை கொண்டு திரைக்கதை எழுதுவது எளிதாக இருந்தது. உண்மைக்கு நெருக்கமாகவும் இருந்தது. இப்படித்தான் படம் உருவானது.

இந்த படத்தின் முக்கிய கேரக்டர்கள் அயோத்திலிருந்து வருவதுபோல் அமைத்ததால், இந்தி நடிகர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதால் ஹீரோயின் பிரீத்தி அஸ்ரானி, நடிகர் யஷ்பால் சர்மா, நடிகை அஞ்சு அஸ்ரானி, தம்பி கேரக்டரில் நடித்த அத்வைத் ஆகியோரை தேர்வு செய்தேன். வட இந்தியாவில் இந்தி மொழியை பல இடங்களில் பலவிதமாக பேசுவார்கள். அயோத்தி மக்கள் பேசும் வட்டார மொழியில் இந்த கேரக்டர்களை பேச வைக்க, உ.பி.,யிலிருந்து ஒரு உதவி இயக்குனர் வந்து பணியாற்றினார். வழக்கமாக முதல் படம் இயக்குபவர்கள், தங்களது கதையை படமாக்க நினைப்பார்கள். என்னிடம் கதைகள் இருந்தாலும் அதற்கான பட்ஜெட் அதிகமாக இருந்தது. அதனால் எஸ்.ராமகிருஷ்ணனின் கதையை படமாக எடுத்தேன்.

Related Stories: