வணங்கான் படத்திலிருந்து கிரீத்தி ஷெட்டி நீக்கம்

சென்னை: வணங்கான் படத்திலிருந்து கிரீத்தி ஷெட்டி நீக்கப்பட்டுள்ளார். சூர்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் பாலா இயக்கி வந்த படம் வணங்கான். இந்த படத்தின் 2 ஷெட்யூல்கள் முடிந்த நிலையில், சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இந்த படத்திலிருந்து சூர்யா விலகிக் கொண்டார். இதையடுத்து இந்த வேடத்தில் அதர்வா நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் இப்போது அருண் விஜய் ஒப்பந்தமாகியுள்ளார். அதேபோல் படத்திலிருந்து கிரீத்தி ஷெட்டியை பாலா நீக்கியுள்ளார்.

அவருக்கு பதிலாக கன்னட நடிகை ரோஷினி பிரகாஷ் ஹீரோயினாக நடிக்கிறார். இவர் தமிழில் ஏமாலி, ஜடா ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். கன்னியாகுமரியில் நாளை முதல் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. முதல் ஷெட்யூலை 25 நாட்கள் நடத்த பாலா முடிவு செய்திருக்கிறார். இந்த ஆண்டிலேயே படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசைஅமைக்கிறார்.

Related Stories: