மருத்துவமனை 4 வது மாடியில் இருந்து குதித்து நர்ஸ் தற்கொலை

திருச்சி: திருச்சி அல்லித்துறை சாந்தபுரம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகள் நிவேதாலட்சுமி (19). வயலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்ற  நிவேதாலட்சுமி, திடீரென 4வது மாடியில் இருந்து கீழே குதித்தார். அப்போது மின்சார கம்பியில் உரசியதில் தீக்காயமடைந்தார். இதை பார்த்த மருத்துவமனை நிர்வாகம், அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: