×

திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் 70 ஜோடிகளுக்கு திருமணம்

திருத்தணி: திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திருத்தணி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஓட்டிலில் நடைபெற்றது. மாவட்ட அவை தலைவர் திராவிட பக்தன் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., திருத்தணி எம். பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் திருத்தணி சந்திரன் எம்.எல்.ஏ., கலந்துக் கொண்டு பேசினார். கூட்டத்தில், தி.மு.க., தலைவர் திராவிட நாயகர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 70 வது பிறந்த நாள் முன்னிட்டு, 70 ஜோடிகளுக்கு சீர்வரிசையுடன் இலவச திருமணம் செய்து வைத்தல், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Tags : DMK ,Tiruvallur West District , Tiruvallur West District DMK organized marriage for 70 couples
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...