×

மேலக்காலனி ஊராட்சியில் ரூ.8 லட்சத்தில் 3 டிரான்ஸ்பார்மர்கள்: டி.ஜே.கோவிந்தராஜன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், மேலக்கழனி ஊராட்சியில் குறைந்த அழுத்த மின் சப்ளை மற்றும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டபடி இருந்தது. இந்த குறைகளை தீர்க்க புதிய மின் மாற்றிகளை அமைத்து தர வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் பத்மஜா கௌரிசங்கர், டி.ஜே.கோவிந்தராஜன் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார். இந்நிலையில், ரூ.8 லட்சம் மதிப்பில் மின்தடை பிரச்னையை நிரந்தரமாக போக்க மூன்று இடங்களில் மின் மாற்றிகள் அமைக்கப்பட்டன. இதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்றதலைவர் பத்மஜா கௌரிசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் எஸ்.ரமேஷ், மாவட்ட துணைச் செயலாளர் எம்.எல்.ரவி,  பொதுகுழு உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், சிறப்பு அழைப்பாளராக டி.ஜே.கோவிந்தராஜன் எம்எல்ஏ கலந்து கொண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மூன்று மின்மாற்றிகளை இயக்கி வைத்தார். இதில், மின்வாரிய உதவி பொறியாளர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், பொறியாளர் உதயகுமார் மற்றும் கட்சியின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மகளிர் சுய உதவி குழு பெண்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Melakalani ,DJ Govindarajan ,MLA , 3 transformers at a cost of Rs 8 lakh in Melakalani panchayat: DJ Govindarajan MLA inaugurated
× RELATED எம்எல்ஏக்கள் டி.ஜெ.கோவிந்தராஜன்,...