நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் அடுத்த கிழக்கு ஃபார்மிங்டேலில் உள்ள ரிபப்ளிக் விமான நிலையத்தில் இருந்து இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேருடன் சிறிய சுற்றுலா விமானம் ஒன்று புறப்பட்டது. திடீரென விமானியின் கேபினில் புகை வெளியேறியதால், வடக்கு லிண்டன்ஹர்ஸ்டில் வெல்வுட் அவென்யூ பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் பயணம் செய்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ரோமா குப்தா (63) விபத்தில் பலியானார். அவரது மகள் ரீவா குப்தா (33) மற்றும் விமானி பைசுல் சவுத்ரி (23) ஆகியோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.