×

நில எடுப்பு தொடர்பான அரசாணைகள் மற்றும் நில ஆர்ஜீதம் குறித்த விதிகளின் நான்கு தொகுப்புகளை வெளியிட்டார் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு..!

சென்னை: தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நில எடுப்பு தொடர்பான அரசாணைகள் மற்றும் நில ஆர்ஜீதம் குறித்த விதிகளின் நான்கு தொகுப்புகளை வெளியிட முதற்பரிதியினை வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த், பெற்றுக் கொண்டார். அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பல்வேறு தலைப்புகளின் கீழ் பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களால் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களுடைய ஆற்றல் திறன் மேம்பாடு அடைய வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

நில எடுப்பு பணிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தற்போது அனைத்து மாவட்டங்களைச் சார்ந்த வருவாய்த் துறை களப் பணியாளர்களுக்கும், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி மூலமாக இரண்டாம் கட்ட பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டு மாநில நில எடுப்பு சட்டங்கள், மத்திய நில எடுப்பு சட்டம், 2013, தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம், 1956 மற்றும் தனிநபர் பேச்சு வார்த்தை முறை ஆகியவற்றின் கீழான நில எடுப்பு நடைமுறைகளின் உயர் இழப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி தொடரப்படும் மனுக்களைக் கையாள்வது குறித்த நடைமுறைகளையும் நில எடுப்பு தொடர்பாக, இதுவரை நடைமுறையில் இருந்துவரும் அனைத்து சட்டங்கள், விதிகள்,

அரசாணை அரசு அவ்வப்போது வெளியிட்ட வழிமுறைகள் ஆகியன உள்ளடக்கிய நான்கு நில எடுப்பு தொகுப்புப் புத்தங்களை இன்று (07.03.2023) காலை 10.00 மணியளவில் நில எடுப்பு தொடர்பான அரசாணைகள் மற்றும் நில ஆர்ஜீதம் குறித்த விதிகளின் நான்கு தொகுப்புகளை தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் / பயிற்சித் துறைத் தலைவர் வெ.இறையன்பு வெளியிட முதற்பிரதியினை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றம் வருவாய் (ம) பேரிடர் மேலாண்மை செயலாளர், குமார் ஜெயந்த் பெற்றுக் கொண்டார். மனிதவள மேலாண்மைத்துறை செயலாளர் மைதிலி கே.இராஜேந்திரன் நில நிர்வாக ஆணையர் எஸ்.நாகராஜன், மற்றும் ஆகியோர் உடனிருந்தனர்.

அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சிமையம்,
அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சியை நடத்தி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் நுழைவுத் தேர்வை நடத்தி 325 ஆர்வலர்கள் (225 முழுநேர மற்றும் 100 பகுதிநேர ஆர்வலர்கள்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சி 6 மாத காலத்திற்கு (டிசம்பர் முதல் மே வரை)  அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி மையத்தில் உள்ள நூலகத்தினை கணினிமயமாக்க பயிற்சித் துறைத் தலைவர் / அறிவுறுத்தலின் பேரில் அனைத்து  புத்தகங்களிலும் BARCODE LABEL ஒட்டப்பட்டு அனைத்து புத்தக விவரங்களும் KOHA மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது.

மேலும், தமிழ்நாடு அரசு மனிதவள மேலாண்மை துறை 2021 - 22 மானியக் கோரிக்கை மூலம் ரூ. 50,99,940/- மதிப்புள்ள கணினிகள் மற்றும் ஒலி மற்றும் ஒளி பெருக்கி கருவிகள் வாங்க நிதி வழங்கப்பட்டது. நூலகத்தில் 13 கணினிகளும், முதல் தளத்தில் உள்ள கணினி அறையில் 37 கணினிகளும் நிறுவப்பட்டு, 50 கணினிகளில் மின்னணு புத்தகங்களை பதிவேற்றம் செய்யப்பட்டு  ஆர்வலர்களின் பயன்பாட்டிக்கு தயாராக உள்ளன. 2021 - 22ல் புத்தகங்களை வாங்க நூலகத்திற்கு ரூ. 3 லட்சம் ஒதுக்கப்பட்டது, அதில் ரூ. 1.50,000/- (50%) மின்னணு புத்தகங்கள் வாங்கச் செலவிடப்பட்டது. விண்ணப்பதாரர்களின் நலனுக்காக 61 மின் புத்தகங்கள் வாங்கப்பட்டன,

முதல்நிலை, முதன்மை மற்றும் ஆளுமைத் தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் மின்னணு புத்தகங்களை ஒரே நேரத்தில் 100 ஆர்வலர்கள் படிக்க ஏதுவாக  வசதி வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 7500 - க்கு அதிகமான நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் அடங்கிய MAGZTER சந்தா செலுத்தி, ஒரே நேரத்தில் 5 ஆர்வலர்கள் பயன்படுத்த வசதி வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மின்னணு நூலகத்தினை தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் / பயிற்சித் துறைத் தலைவர் வெ.இறையன்பு 07.03.2023 அன்று திறந்து வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் மனிதவள மேலாண்மைத்துறை செயலாளர் மைதிலி கே.இராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தார்.

போட்டித்தேர்வுகள் பயிற்சி மையங்கள்  (சென்னை மற்றும் இதர மையங்கள்)
அரசாணை எண்.123 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் (பயிற்சி-3)த்துறை நாள்.15.09.2017ன்-படி படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC),மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC),வங்கிப் பணியாளர் தேர்வாணையம் (IBPS) மற்றும் இரயில்வே பணியாளர் தேர்வாணையம் (RRB) ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கும் பொருட்டு போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் சென்னையிலுள்ள பழைய வண்ணாரப்பேட்டையிலும், அரசாணை எண்.166 பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்த (பயிற்சி-1)த்துறை நாள்.30.10.2019 ன்படி போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் நந்தனம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் தோற்றுவிக்க ஆணையிடப்பட்டது.

மத்திய மற்றும் மாநில அரசு முகமைகளால் நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சித்துறைத் தலைவர் கட்டுப்பாட்டில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களான சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி மற்றும் நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி ஆகிய மையங்களில் தமிழக அரசின் சார்பில் மாணவ / மாணவியர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு இட ஒதுக்கீடு மற்றும் பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவ / மாணவியர்கள் பயிற்சி வகுப்பில் சேர்க்கப்பட்டு, கட்டணமில்லா பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

சர் தியாகராயா கல்லூரியில் உள்ள போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் 04.10.2017-ல் ஆரம்பிக்கப்பட்டு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் 04.12.2018 முதல் 17.12.2022 வரை ஒன்பது அணிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டதன் மூலம் 3,268 மாணவ / மாணவியர்கள் பயனடைந்துள்ளனர். கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தினை 07.03.2023 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணியளவில் சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி வளாகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் / பயிற்சித் துறைத் தலைவர் வெ.இறையன்பு., தொடங்கி வைத்தார்கள். மனிதவள மேலாண்மைத்துறை செயலாளர் மைதிலி கே.ராஜேந்திரன். உடன் இருந்தார்கள்.

Tags : Chief Secretary ,V. Irayanbu , Chief Secretary V. Irayanbu released four sets of ordinances related to land acquisition and rules on land acquisition..!
× RELATED கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்...