×

ஐபிஎல் டி20 கிரிக்கெட் சென்னையில் சிஎஸ்கே வீரர்கள் தீவிர பயிற்சி

சென்னை: 10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் வருகிற 31-ம் தேதி முதல் மே 28-ம் தேதி வரை நடக்கிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள தொடக்க லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சுடன் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்காக சென்னைக்கு வந்துள்ள டோனி, ரஹானே, ஷிவம் துபே, அம்பத்தி ராயுடு உள்ளிட்ட சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அது தொடர்பான வீடியோவை சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் பேட்டிங், பீல்டிங் மற்றும் கால்பந்து போன்றவையும் இடம்பெற்றுள்ளன.


Tags : CSK ,IPL T20 ,Chennai , CSK players intensive training in IPL T20 cricket Chennai
× RELATED டெல்லியை மீண்டும் வீழ்த்தி பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யுமா ராஜஸ்தான்?