ஒரு நாள், டெஸ்ட் அணிக்கு பவுமா தலைமை ஏற்கிறார் தென் ஆப்பிரிக்க அணியின் டி20 கேப்டனானார் மார்க்ரம்

கேப்டவுன்: தென் ஆப்பிரிக்காவில் விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள், 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது. அதன் பின்னர் ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் நடைபெற உள்ளன. இதற்கிடையில் கடந்த ஆண்டு நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி முதல் சுற்றுடன் வெளியேறியது. தோல்வி எதிரொலியாக பவுமா 20 ஓவர் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். தற்போது பவுமா டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி அணியின் கேப்டனாக இருக்கிறார். இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 அணிகளில் பங்கேற்கும் வீரர்களை தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக இருந்த பவுமா வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டி 20 அணிக்கு எய்டன் மார்க்ரம் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் எய்டன் மார்க்ரம் தலைமைமையிலான சன்ரைசர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் தென் ஆப்பிரிக்கா டி20 அணிக்கு இனிமேல் மார்க்ரமே கேப்டனாக செயல்படுவார் என கூறப்படுகிறது.

மார்க்ரம் (கேப்டன்), குயின்டான் டி காக், போர்ச்சுன், ரீஜா ஹென்ரிக்ஸ், மார்கோ ஜேன்சன், ஹென்ரிச் கிளாசென், சிசான்டா மஹாலா, டேவிட் மில்லர், இங்கிடி, அன்ரிச் நோர்ஜியா, வெய்ன் பார்னெல், ரபாடா, ரோசவ், ஷம்சி, டிரிஸ்டான் ஸ்டப்ஸ். இந்நிலையில் வெள்ளைநிற பந்து போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் வீரர் டுமினியும், பந்துவீச்சு பயிற்சியாளராக கிளென்வெல்த்தும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: