ராமநாதபுரம் அழகன்குளம் கிராமத்தில் அருங்காட்சியகம் அமைக்க 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது: தமிழ்நாடு அரசு

மதுரை: ராமநாதபுரம் அழகன்குளம் கிராமத்தில் அருங்காட்சியகம் அமைக்க 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அழகன்குளம் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  2015-16-ல் அழகன்குளம் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு தொடர்பாக அறிக்கை தயார் செய்யப்பட்டது. நிபுணர்களின் ஒப்புதலுக்காக அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு பதில் அளித்துள்ளது.

Related Stories: