×

அதிமுக குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே சொந்தமான கட்சி அல்ல: பாஜக-வின் அமர்பிரசாத் கருத்துக்கு கே.பி.முனுசாமி பதிலடி

கிருஷ்ணகிரி: தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளாக கோலோச்சி வரும் கட்சியை ஒரு குறிப்பிட பகுதிக்கு மட்டுமே சொந்தமான கட்சியாக முன்னிறுத்த முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனம்பள்ளி அருகே பெரியகோட்டப்பள்ளியில் அரசு பள்ளி கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜையை அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்;

இன்றும் அதிமுக சிறந்த எதிர்கட்சியாக திகழ்ந்து கொண்டு இருப்பதாகவும், அப்படிப்பட்ட ஒரு கட்சியை ஒரு பகுதிக்கு சொந்தமான இயக்கமாக பாஜக-வின் அமர்பிரசாத் ரெட்டி முன்னிறுத்துவது அவருடைய அறியாமையை காட்டுவதாகவும் கூறினார். கொங்கு மண்டலத்தில் அதிமுக-வின் செல்வாக்கு சரிந்து விட்டதாக அமர்பிரசாத் தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முனுசாமி இந்த கருத்தை தெரிவித்தார்.

பொதுவாக ஒரு கட்சியில் இருந்து வெளியேறுவார்கள் இயல்பாக சில காரணங்களை சொல்லி வெளியேறுவதை போல நிர்மல்குமார் மற்றும் திலிப் கண்ணன் ஆகியோர் பாஜக-வில் இருந்து விலகியிருப்பதாக கே.பி.முனுசாமி தெரிவித்தார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை அளிப்பதை போல அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியதும் அரசின் கடமை என்றார்.  


Tags : K.K. GP Munusami , அதிமுக, சொந்தமான, கட்சி, அல்ல, பாஜக, அமர்பிரசாத், கருத்து, கே.பி.முனுசாமி, பதிலடி
× RELATED பேப்பர் கிடங்கில் தீ விபத்து