கண்மாய் முழுவதும் கருவேலமரங்கள் ஆக்கிரமிப்பு தண்ணீரின்றி தவிக்கும் மஞ்சள் நதி கண்மாய்-நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

சின்னமனூர் : சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூர் அருகே உள்ள மஞ்சள் நதி எனும் மரிகாட் கண்மாயை காக்க முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீரைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மரிகாட் அணை பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூர் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 8 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தை சுற்றியுள்ள பகுதியில் வாழை, தென்னை, தி ராட்சை, காய்கறிகள், சோளம், தக்காளி விவசாயம் நடந்து வருகிறது. மேலும் மரிகாட் அணையினை சுற்றியுள்ள சுமார் 10 ஆயிரம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் நிலக்கடலை, சோளம் ,மக்காச்சோளம், உளுந்து, துவரை மற்றும் ஒரு போக நெல் விவசாயத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே,இப்பகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை கருத்தில் கொண்டு இக்கிராமத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹைவேவிஸ் மற்றும் பெருமாள் மலை அடிவாரத்தில் மஞ்சள் நதி எனும் மரிகாட் கண்மாய் 100 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டது. தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவகாலங்களில் இம்மலைப் பகுதியில் பெய்யும் மழை நீரானது, இப்பகுதியில் உள்ள ஓடைகளின் வழியாக மஞ்சள் நதி கண்மாய்க்கு வந்தடையும். இதன்மூலம் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து கிணறுகளில் ஊற்று பெருகும். மஞ்சள் நதி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், இப்பகுதியில் கருவேல மரங்களும் அதிக அளவில் வளர்ந்துள்ளன.

இதுமட்டுமல்லாமல் கடந்த கால அதிமுக ஆட்சியின்போது, மஞ்சள் நதி கண்மாய் தொடர்ந்து மணல் அள்ளி கேரளா மாநிலத்திற்கு கடத்தியதால் இப்பகுதி வறண்ட பகுதியாக மாறிப்போயுள்ளது. மேலும், இப்பகுதியில் பருவகால மழை பொய்த்து போனதால் இப்பகுதிக்கு தண்ணீர் வரத்தில்லாமல் வறண்ட நிலையே காணப்படுகிறது. வறண்டு போயுள்ள அணைப்பகுதியை பலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியதையடுத்து, கடந்த 2019-20ஆம் ஆண்டு குடிமராமத்து பணிக்காக சுமார் ரூ. 1 கோடி ஒதுக்கப்பட்டாலும், அணையின் கரைகளை உயர்த்தி பலப்படுத்தாமல் அரைகுறையாக பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் அணைப்பகுதிக்க எவ்வித பலனும் ஏற்படவில்லை. இதனால் அணைப்பகுதியில் தண்ணீர் தேங்காத நிலையை நீடிக்கிறது.

ஹைவேவிஸ், பெருமாள் மலை அடி வாரப் பகுதிகளில் பருவகால நிலையில் மாற்றும் ஏற்பட்டிருக்கிறது. மேலும் மழை சரிவர பெய்யாத காரணத்தால் அரைகுறையாக பெய்யும் மழைநீரால் கால் குளம் அளவே கண்மாய்க்குள் தண்ணீர் தேங்கினாலும் அதுவும் கூடுதலாக வீசும் வெய்யிலே சீக்கிரம் குடித்து விடுகிறது. ஆனால் கடந்த 12ஆண்டுகளுக்கு மேலாகவே தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவ மழையும் சரிவர பெய்யாமல் இருப்பதால் அணை வறண்ட நிலையிலேயே இருந்து வருகிறது.

கடந்த 2011 ஆம் ஆண்டு மட்டுமே சென்னையில் பெய்த மழை போல் இங்கு பெய்ததால் கண்மாய் முழு கொள்ளவை கொண்டு மறு கால் பாய்ந் து எரசக்கநாயக்கனூர் கால்வாய் வழியாக கடந்து எரசக்கநாயக்கர் குளத்தினை நிரப்பியது. இரு மலைகளின் அடிவாரத்தில் இருப்ப தால் குடிநீருக்கு பற்றாக்குறை இன்றி நிலத்தடி நீர் கிடைப்பதால் பொதுமக்கள் ஒரு புறம் மகிழ்ச்சி அடை ந்தாலும் இப்படி மழை பெய்யாமல் நீடித் தால் பூமியும் வறண்டு குடிநீருக்கும் பெரும் பஞ்சம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

மேலும் பாசன நீர் கிடைக்காமல் விவசாய நிலங்களையும் அப்படியே தரிசாக விட்டு விவசாயிகள் அனைவரும் விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு மாற வேண்டிய சூழ்நிலை உருவாகும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மஞ்சள் நதி எனும் மரிகாட் கண்மாயை காக்க முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீரைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த விவசாயி சன்னாசி கூறுகையில், விவசாயத்திற்கும் குடிநீருக்கும் ஆதாரமாக மரிக் காட் அணை உள்ளது. கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக சரிவர பருவமழை பெய்யாத காரணத் தால் மழை நீர் தேங்காமல் வறட்சியாக உள்ளது. ராயப்பன்பட்டி சண்முகாநதி அணையில் இருந்து திறக்கப்படும் நீர் ராயப்பன்பட்டி, ஆனைமலையான்பட்டி, சின்னஓவுலாபுரம், எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைபட்டி, அப்பிபட்டி, வெள் ளையம்மாபுரம் வழியாக ஓடைப்பட்டி வரை கால்வாய் வழியாக விவசாயத்திற்கு செல்கிறது.

உத்தமபாளையம் வாய்க்கால்பட்டியலில் இருந்து பி.டிஆர் கால் வாய் பிரியும் இடத்தில் புதியதொரு கால்வாய் உருவாக்கிட வேண்டும். இந்த கால்வாயில் சண்முக நதி அணையின் கால்வாயை இணைத்து அந்த நீரை எரசக்கநாயக்கனூரில் பிரியும் பகுதியில் ஒரு கால்வாய் வெட்டி மரிகாட் அணையில் இணைத்து மரிக்காட் அணையில் தண்ணீரினை நிரப்ப வேண்டுமென அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது’’ என்றார்.

Related Stories: