×

துருக்கி அதிபர் தேர்தலுக்கான எதிர்க்கட்சி வேட்பாளர் தேர்வு: ஆறு எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக கிலிக்டரோக்லு போட்டி

துருக்கி: துருக்கியில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் அதிபர் எர்டோகனை எதிர்த்து துருக்கிய எதிர்க்கட்சி தலைவர் கெமால் கிலிக்டரோக்லு போட்டியிட உள்ளார். நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியின் தலைவரான கிலிக்டரோக்லு தற்போது ஆறு எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணி சார்பில் தேர்ந்தெடுக்க பட்டுள்ளார். தேர்தல் கருத்துக்கணிப்புகளில் இந்த முறை எதிர்க்கட்சி கூட்டணி ஆளும் கூட்டணியை விட சற்று முன்னிலையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

பல ஆண்டுகளாக துருக்கியில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் போன்றவை அதிபர் எர்டோகனுக்கு பாதகமாக கூறப்படுகிறது. மேலும் சமீபத்திய பூகம்பத்தில் துருக்கியில் மட்டும் 46,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்தது, அதிபருக்கு தேர்தல் பெரும் பின்னடைவை தரும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். பொருளாதாரம் மக்களின் உரிமைகள் உள்ளிட்ட எர்டோகனின் பல்வேறு கொள்கைகளை எதிர்க்கட்சி வேட்பாளர் வென்றால் பரிசீலிப்பார் என்று அந்த நாட்டின் மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Tags : Turkey ,Kilicdaroglu , Kilicdaroglu, race for Turkish president, election, candidate
× RELATED துருக்கியில் கேளிக்கை விடுதியில்...