சென்னை: பீகார் அரசு சார்பாக தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். வதந்திகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு எவ்வளவு வேகமாக நடவடிக்கை எடுத்தது என்பதையும் நாங்கள் பார்தோம். செல்போன் மூலமாக பீகார் தொழிலாளர்களுக்கு வரப்பெற்ற செய்தி பொய்யானது என்று தெரியவந்துள்ளது. வேறு மாநிலங்களில் நடந்த சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்ததுபோல் சித்தரித்து தொழிலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
