×

புத்தர் கோயிலில் ஒரு லட்சம் விளக்குகள் ஏற்றி வழிபாடு: தாய்லாந்தில் மகா புச்சா விழாவை கொண்டாடிய மக்கள்

தாய்லாந்து: தாய்லாந்தில் மகா புச்சா விழாவை விழாவை முன்னிட்டு அங்குள்ள புத்தர் கோவிலில் 1 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டன.  ஒவ்வொரு ஆண்டும் 3வது சந்திர மாதத்தின் முழு நிலவு நாளை புத்த மனத்தினர் மகா பூஜை விழாவாக கொண்டாடுகின்றனர். அந்த நாளில் புத்தர் கோவில்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் புத்தரின் போதனைகளை கேட்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கூடுவர். அந்த வகையில் தாய்லாந்தில் உள்ள புத்தர் கோவிலில் துறவிகள் ஊர்வலமாக சென்று ஒரு லட்சம் விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்தனர். பலர் ஆங்காங்கு கோவில் வளாகத்தில் விளக்குகளை ஏற்றி தனியாக பிராத்தனை செய்தனர். புதர்களின் புனித நாள் என்பதால் நேற்று தாய்லாந்தில் கடைகள் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Buddha temple ,Maha Bucha festival ,Thailand , Buddha temple, one lakh lanterns, Maha Bucha festival in Thailand, people celebrating
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...