×

நாகர்கோவிலில் கலைஞரின் முழு உருவ வெண்கல சிலை, புதிய மாநகராட்சி அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

குமரி: நாகர்கோவில் ஒழுகினசேரியில் குமரி மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 6.5 அடி உயர பீடத்தில், 8.5 அடி உயரமுள்ள வெண்கலத்தாலான கலைஞரின் முழு உருவ சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள 25 அடி உயர கொடிக்கம்பத்தில் மு.க.ஸ்டாலின் தி.மு.க. கொடியேற்றி வைத்தார். முதலமைச்சர் வருகையடுத்து நாகர்கோவில் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. திமுக சார்பில் சாலையின் இரு புறங்களும் முதலமைச்சரை வரவேற்கும் வகையில் கொடி தோரணங்கள் அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் வருகை தி.மு.க.வினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலூர், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், பெரியசாமி, மனோ தங்கராஜ் மாநகராட்சி மேயர் மகேஷ், கலெக்டர் ஸ்ரீதர், மாநகராட்சி ஆணையர் ஆனந்தமோகன் மற்றும் கவுன்சிலர்கள்  கலந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புதிய மாநகராட்சி அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 4 தளங்களுடன் ரூ.10.50 கோடி செலவில் கலைவாணர் மாளிகை என்ற பெயரில் மாநகராட்சி கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. 4 தளங்களுடன் மொத்தம் 56,809 சதுர அடி கட்டடப் பரப்பளவில் கலைவாணர் மாளிகை கட்டப்பட்டுள்ளது. கூட்ட அரங்கம் லிப்ட் வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மாநகராட்சி அலுவலகம் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.

Tags : Nagarkovil ,Chief Minister ,BCE ,G.K. Stalin , Nagercoil, artist, full bronze statue, Chief Minister M.K.Stalin
× RELATED தனிக்கட்சி தொடங்குகிறார் ஓ.பன்னீர்செல்வம்?