×

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொழிலாளர்களுக்கு எதிராக போடப்பட்ட அரசாணைகள் 321 முதல் 328 வரை திரும்பப் பெற கோரி முதல்வருக்கு போக்குவரத்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு கடிதம்

சென்னை: அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொழிலாளர்களுக்கு எதிராக போடப்பட்ட அரசாணைகள் 321 முதல் 328 வரை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வருக்கு போக்குவரத்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது:
தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துத் துறையில் செயல்பட்டு வந்த பேருந்துகளை 01.01.1972-ல் போக்குவரத்துக் கழகமாக்கப்பட்டது. தனியார் வசமிருந்த பேருந்துகளையும் 1973 ஆம் ஆண்டில் தேசிய மபமாக்கி, போக்குவரத்துக் கழகங்களுடன் இணைத்த பெருமை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைச் சாரும். அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 2001 ஆம் ஆண்டில் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் 50 சதவிகித பேருந்துகளை தனியாருக்கு தாரை வார்க்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் முயன்றபோது, தொழிலாளர்கள் நன்னெழுச்சியாக வேலைநிறுத்தம் செய்தனர்.

தலைவர் கலைஞர் “மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தனியார் வசம் விடப்படும் பேருந்துகளை மீண்டும் தேசியமயமாக்குவோம் என்று கூறியதால் அம்முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. தங்கள் தலைமையில் ஆட்சி மலர்ந்து, பல்வேறு பொருளாதார சிக்கல்கள் இருப்பதை கணக்கில் கொண்டு தொழிலாளர்கள் 2 ஆண்டுக்கான ஊதிய பலன்களை விட்டுக் கொடுத்து, ஊதிய உயர்வை ஏற்றுக் கொண்டார்கள்.

(1) ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடைபெறும்போது கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொழிலாளர்களுக்கு எதிராக போடப்பட்ட அரசாணைகள் 321 முதல் 328 வரையில் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. ஆனால் திரும்பப்பெறப்படவில்லை. ஆகவே தாங்கள் இதன் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு அரசாணைகள் 321 முதல் 328 வரை திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

(2) ஒப்பந்த முறையில் ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்பப் பணியாளர்கள், அலுவலகப் பணியாளர்களை பணியில் அமர்த்தும் உத்தரவை திரும்பப் பெற்று வழக்கம்போல் நேரடியாக பணி அமர்த்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

(3) தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு அமர்த்தி போக்குவரத்துக் கழகங்களில் இயக்குவதற்கு வெளியிட்டுள்ள அறிவிப்புகளை திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


Tags : A.D.M.K. ,Transport All Trade Union Confederation ,Chief Minister , A.D.M.K. Government, Anti-Labour Ordinances, Transport All Union Federation letter to CM
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...