ஆன்லைன் ரம்மியால் தொடர் தற்கொலைகள் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து போராட்டம்: வேல்முருகன் அறிவிப்பு

பண்ருட்டி: தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாட்டில்  ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள், கொலை மற்றும் கொள்ளைகள்  அதிகரித்துள்ளது. ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் எண்ணற்ற குடும்பங்கள் கடன்பட்டு  நடுத்தெருவுக்கு வந்திருக்கின்றன. எனவே, ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் மாபெரும் போராட்டம் விரைவில் நடத்தப்படும். இவ்வாறு அதில் உள்ளது.

Related Stories: