சென்னை: திராவிட மாடல் பாதைக்கு அடித்தளமிட்ட நாள் இன்று (நேற்று) என்றும், அண்ணாவின் லட்சியங்களை நிறைவேற்ற பாடுபடுவோம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவு: நாம் செல்லுகின்ற திராவிட மாடல் பாதைக்குப் பேரறிஞர் அண்ணா அடித்தளமிட்ட நாள் இன்று. ‘ஏ தாழ்ந்த தமிழகமே’ எனத் தட்டியெழுப்பி, தமிழ்நாட்டைத் தலைநிமிர வைத்த பேரறிஞர் அண்ணா, வெறும் பெயரல்ல, தமிழர் பெற்ற உணர்வு. பேரறிஞர் பெருந்தகையின் லட்சியங்களை நிறைவேற்றப் பாடுபடுவோம். இவ்வாறு கூறியுள்ளார்.
