×

ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் மேக்ஸ் ஹாட்ரிக்: ‘டாப் 100’ல் இடம் பிடித்தார்

புனே ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தொடர்களில் சென்னை, பெங்களூருவை தொடர்ந்து புனேவிலும்  ஆஸி. வீரர் மேக்ஸ் புர்செல் சாம்பியன் பட்டம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தார். தொடர்ந்து 3 வாரங்களில் 3 சாம்பியன் பட்டங்களை வென்ற மேக்ஸ் தரவரிசையில் முதல்முறையாக டாப் 100ல் இடம் பிடித்தார். புனே ஓபன் பைனலில் இத்தாலி வீரர் லுகா நார்டியுடன் மோதிய மேக்ஸ் (25 வயது, 116வது ரேங்க்) 6-2, 6-3 என நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 18 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இதற்கு முன்பு சென்னை ஓபன் ( பிப்.12-19), பெங்களூரு ஓபன் (பிப்.20-26) தொடர்களில் அவர் பட்டம் வென்றிருந்தார்.

இந்த ஹாட்ரிக் வெற்றியின் மூலம் ஏடிபி தரவரிசையில் மேக்ஸ் 21 இடங்கள் முன்னேறி 95வது இடத்தை பிடித்துள்ளார். முதல் முறையாக அவர் டாப் 100ல் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை ஓபன் வெற்றியால்  48 இடங்கள் முன்னேறி 155வது இடத்தையும், பெங்களூரு ஓபன் வெற்றியால்  39 இடங்கள் முன்னேறி 116வது இடத்தையும் அவர் எட்டியிருந்தார். 3 வாரங்களில் 203வது இடத்தில் இருந்து 108 இடங்கள் முன்னேறி அசத்தியுள்ளார்.

* தமிழக வீரர்கள் சாம்பியன்: புனே ஓபன்  இரட்டையர் பிரிவில் களமிறங்கிய தமிழக வீரர்கள் அனிருத் சந்திரசேகர் - விஜய்சுந்தர் பிரசாந்த் பைனலில்  6-1, 4-6, 10-3 என்ற செட் கணக்கில் ஜப்பானின் டோஷிஹிடே மட்சூயி - கெய்டோ வூசுகி இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.

Tags : ATP ,Max Hattrick , ATP Challenger Tennis Max Hattrick: Ranked in 'Top 100'
× RELATED சில்லி பாயின்ட்…