×

ஐதராபாத் ஷூட்டிங்கில் அமிதாப்புக்கு காயம்: படப்பிடிப்பு ரத்து

மும்பை: ஐதராபாத்தில் நடந்த சினிமா ஷூட்டிங்கில் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டதால், படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. தற்போது அவர் ஓய்வெடுத்து வருகிறார். பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடந்த ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். படப்பிடிப்பின்போது நடந்த சண்டைக் காட்சியில் எதிர்பாராத விதமாக அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டது. அதையடுத்து அவர் ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் ஐதராபாத்தில் இருந்து மும்பை திரும்பினார். தற்போது, அவரது படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்ட நிலையில், வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‘ஐதராபாத் சினிமா ஷூட்டிங்கில் ஏற்பட்ட காயத்தால், வீட்டில் ஓய்வெடுத்து வருகிறேன். எனது நலம் விரும்பிகள் வீட்டிற்கு வரவேண்டாம். தற்போது நன்றாக உள்ளேன். எனது அனைத்து நடவடிக்கைகளையும் செல்போன் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.


Tags : Amitabh ,Hyderabad , Amitabh injured in Hyderabad shoot: shoot cancelled
× RELATED கலைஞர் 100 விழாவில் பங்கேற்க அமிதாப் பச்சனுக்கு அழைப்பு..!!