வரும் 2024 தேர்தலில் அமேதி தொகுதியில் சமாஜ்வாடி போட்டி: அகிலேஷ் யாதவ் டிவிட்

லக்னோ: வழக்கமாக காங்கிரசுக்காக விட்டு கொடுக்கப்படும் அமேதி தொகுதியில் வரும் 2024 மக்களவை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமேதி சென்றிருந்தார்.

பின்னர் அவர் தனது டிவிட்டரில், ``அமேதி ஏழை பெண்களின் நிலையைக் கண்டு பரிதாபமடைந்தேன். முக்கிய தலைவர்கள் போட்டியிட்டு வெற்றி அல்லது தோல்வி அடைந்த இத்தொகுதியில் நிலைமை இப்படி இருக்கிறது என்றால் மாநிலம் முழுவதும் சொல்ல வேண்டுமா?’’ என்று கேள்வி எழுப்பியதுடன் இரண்டு பெண்கள் தரையில் அமர்ந்திருக்கும் போட்டோவை இணைத்து பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர், ``அடுத்த முறை அமேதி பெரிய தலைவர்களை தேர்ந்தெடுக்காது. பெரிய மனது உடையவர்களையே தேர்வு செய்யும். சமாஜ்வாடி அமேதி தொகுதியில் போட்டியிடும். அங்கு ஏழ்மையை ஒழிக்கும். கடந்த 2019ல் நடந்த மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில்  போட்டியிட்ட ராகுல் காந்தியை பாஜவின் ஸ்மிருதி இரானி தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: