வடமாநில தொழிலாளர்களுக்கு பாஜ ஆளும் மாநிலங்களில் பாதுகாப்பு இல்லை: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

சென்னை: ‘பாஜ ஆளும் மாநிலங்களில், வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என்று முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார்.சென்னை புரசைவாக்கம் தானா தெருவில், முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சி.மகேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சிதம்பரம் பேசியதாவது:

21 மாத திமுக ஆட்சிக்கு, மக்கள் கொடுத்த பரிசுதான் ஈரோடு தேர்தல் வெற்றி. இந்த தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை அடைந்தவர்கள், இனியாவது அடங்கி இருக்கவேண்டும். இந்தியா வளர்கிறது என்பது கட்டுக்கதை. ஏறுமுகத்தில் வளர்ச்சி இல்லை, இறங்குமுக வளர்ச்சியில்தான் நாடு உள்ளது. பண வீக்கம், வேலையின்மையால் அடித்தட்டு மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். வட மாநிலத்தவர்களுக்கு பாஜ ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. புரளியை தொடர்ந்து பரப்பினால் அது உண்மையாகும் என்று நம்பிக்கொண்டுள்ளனர். பாஜ தமிழ்நாடு வளர்ச்சிக்கும், தமிழ் மொழிக்கும் நேர் விரோதமான கொள்கை உடைய கட்சி என்பதை என்றும் நாம் மறக்க கூடாது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் எந்த பிளவையும் யாரும் ஏற்படுத்த முடியாது.

Related Stories: