×

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் போட்டி தேர்வு பிரிவு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினால் துவங்கப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ‘போட்டி தேர்வு பிரிவை’  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை 10 மணிக்கு துவங்கி வைக்கிறார். ‘நான் முதல்வன்’ திட்டத்தின் போட்டி தேர்வுகள் பிரிவின் கீழ், அரசு தேர்வுகளான SSC, Railway, Banking, UPSC, TNPSC, Defence, போன்ற பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தமிழ்நாடு முழுவதும் சிறந்த முறையில் பயிற்றுவிக்கும் வகையில் இத்திட்டம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே துவங்கப்பட உள்ளது. இதில், மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்படும்.

இந்த தொடக்க விழாவிற்கு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன், சிறப்பு திட்ட செயலாக்க துறை அரசு முதன்மை செயலாளர் உதயச்சந்திரன், அதிகாரிகள் இன்னசென்ட் திவ்யா,க கலியமூர்த்தி (ஓய்வு) கலந்து கொள்ள உள்ளனர்.

Tags : Minister ,Udayanidhi Stalin , 'Nan Muluvan' Scheme, Competitive Examination Division, Minister Udayanidhi Stalin,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்