காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்து ராஜகுலம் பகுதியில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, திமுக தொமுச தொழிற்சங்க தொடக்க விழா மற்றும் கொடியேற்று விழா 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. விழாவில், தொமுச மாவட்ட பேரவை தலைவர் கே.ஏ.இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எஸ்.சுந்தரவரதன் முன்னிலை வகித்தார். இதில், வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் ஆர்.கே.தேவேந்திரன் கலந்து கொண்டு திமுக தொழிற்சங்க தொடக்க விழாவை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தொழிற்சங்க நிர்வாகிகள் சுந்தர்ராஜன், யுவராஜ், ஜெயராஜ், பாண்டுரங்கன், ஐயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.