மீஞ்சூரில் ஐவர் கால்பந்தாட்ட போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு: பொன்னேரி எம்எல்ஏ வழங்கினார்

பொன்னேரி: மீஞ்சூரில் நடைபெற்ற ஐவர் கால்பந்தாட்ட போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பொன்னேரி எம்எல்ஏ துரைசந்திரசேகர் பரிசுகள் வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் நியூடவுன் நகரில் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில், 16 அணிகள் பங்கேற்ற ஐவர் கால்பந்தாட்டப் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மேலூர், மீஞ்சூர், சீமாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கால்பந்தாட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த  கருணாகரன் அணியினருக்கு எல்இடி டிவியும், 2ம் இடம் பிடித்த துரைசந்திரசேகர் அணிக்கு குளிர்சாதன பெட்டியும் பரிசாக வழங்கப்பட்டது.

இதில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரைசந்திரசேகர் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு பதக்கங்களையும், பரிசுகளையும் வழங்கி பாராட்டினார். திமுக மீஞ்சூர் பேரூர் செயலாளர் தமிழ் உதயன், மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சிமன்றத் தலைவர் ருக்மணி மோகன்ராஜ், துணைத்தலைவர் அலெக்சாண்டர், மீஞ்சூர் நியூடவுன் குடியிருப்போர் நலசங்கத் தலைவர் ஆனந்தன், செயலாளர் அரவிந்த், பொருளாளர் வசந்த், மீஞ்சூர் பேரூராட்சிக்குப்பட்ட வார்டு கவுன்சிலர்கள் ரஜினி, நக்கீரன், தன்ராஜ் ஜெய்சங்கர், பாஸ்கர், ராஜேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Stories: