திருமழிசை பேரூராட்சியில் முதலமைச்சர் பிறந்த நாள் விழா: நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி வழங்கினார்

திருவள்ளூர்: திருமழிசை பேரூராட்சியில், முதலமைச்சர் பிறந்த நாள் விழாவையொட்டி, நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமழிசை பேரூராட்சி, உடையவர் கோயில் பகுதியில், 5 வது வார்டு கவுன்சிலர் கஸ்தூரி அருள் ஏற்பாட்டில் பெண்களுக்கு இலவச சேலை, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் பிரியாணி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பேரூர் திமுக செயலாளர் தி.வே.முனுசாமி தலைமை தாங்கினார்.

மாவட்ட பிரதிநிதி வழக்கறிஞர் வி.எம்.நாகதாஸ், பொருளாளர் பி.அருள் ஆகியோர் வரவேற்றனர். பேரூர் நிர்வாகிகள் ஆர்.கருணாநிதி, தி.கோ.செல்வம், மு.குமார், எஸ்.பார்த்திபன், எஸ்.இளங்கோ, கே.வேலு, ஜெ.சண்முகம், ஜி.நாகராஜ், ஜான் மேத்யூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்களுக்கு இலவச சேலை, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா மற்றும் பிரியாணியும் வழங்கினார்.

பின்னர்,  அவர் பேசுகையில், ‘‘முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அடிமட்ட தொண்டனாக இருந்து படிப்படியாக திமுக இளைஞர் அணி செயலாளர், எம்எல்ஏ, மாநகராட்சி மேயர், அமைச்சர், துணை முதலமைச்சர், திமுக பொருளாளர், செயல் தலைவர் என தொடர்ந்து உழைத்து பல்வேறு பதவிகளை வகித்து வந்தார். தற்போது முதலமைச்சராக பதவி வகித்து நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி வருகிறார்.’’ என்றார். இதில் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவரும், ஒன்றிய செயலாளருமான டி.தேசிங்கு, எம்.சங்கர், சதீஷ் தென்னரசு வெண்ணில்குமார், கோகுல், கார்த்தி, பிரேம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: