தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை ஊட்டி வருகை: நீலகிரியில் பலத்த பாதுகாப்பு

ஊட்டி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, 5 நாள் பயணமாக நாளை ஊட்டி வருகிறார். இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி நாளை (செவ்வாய்) 5 நாட்கள் பயணமாக ஊட்டிக்கு வருகிறார். முன்னதாக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் அவர், அங்கிருந்து மேட்டுப்பாளையம், கோத்தகிரி, தொட்டபெட்டா வழியாக கார் மூலம் சாலை மார்க்கமாக ஊட்டிக்கு வருகிறார்.

பின்னர் ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் தங்குகிறார். தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி வரும் 12ம் தேதி வரை ஊட்டியில் தங்க உள்ளதாகவும், அருகில் அமைந்துள்ள கேரளாவின் வயநாடு மாவட்டத்திற்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கவர்னர் வருகையையொட்டி நீலகிரி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: