×

இம்ரான் கானுக்கு எதிரான கைது வாரண்டை நிறுத்திவைக்க முடியாது: பாகிஸ்தான் கோர்ட் அதிரடி..!

இஸ்லமபாத்: இம்ரான் கானுக்கு எதிரான கைது வாரண்டை நிறுத்திவைக்க முடியாது என்று பாகிஸ்தான் கோர்ட் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமராக இருந்த பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் (பிடிஐ) கட்சி தலைவர் இம்ரான் கான், கட்சி நிதி விவரங்களை மறைந்ததாக அவரை தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு தகுதி நீக்கம் செய்தது. இதனால் பிரதமர் பதவியை இம்ரான் கான் இழந்தார். இதனால் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தினர். இதைத் தொடர்ந்து இம்மான் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இம்ரான் கான் பிரதமராக பதவியில் இருந்தபோது பெறப்பட்ட பரிசுகளை, குறைந்த விலையில் வாங்கி அதிக விலைக்கு விற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கில் அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே இம்ரான் கானின் வழக்கறிஞர்கள், இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் இன்றைய விசாரணையின்போது ஆஜராகி, இம்ரான் மீதான கைது வாரண்டை நிறுத்தி வைக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

இம்ரான் கான் நீதிமன்ற உத்தரவுகளை எப்போதும் பின்பற்றுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதால் அவரை காவல்துறையால் கைது செய்ய முடியாது என்று அவரது வழக்கறிஞர் இமாம் இமாம் வாதிட்டார். ஆனால் அவர்களின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி; கைது வாரண்ட் மீது இடைக்கால தடை பெறுவதற்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகியிருக்கலாம் என்றும் நீதிபதிகள் அறிவுரை வழங்கினார்.


Tags : Imran Khan ,Pakistan Court of Action , Arrest warrant against Imran Khan cannot be suspended: Pakistani court action..!
× RELATED மக்கள் தீர்ப்பை திருடிய அதிகாரிகள்...