×

நான் முதல்வன்'திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை நாளை தொடங்கி வைக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!

சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். முதலமைச்சரால் துவங்கப்பட்ட மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் “போட்டித் தேர்வுப் பிரிவு” இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, வறுமை ஓழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் (07.03.2023) நாளை காலை 10.00 மணியளவில் துவங்கப்பட உள்ளது.

“நான் முதல்வன்” திட்டத்தின் போட்டித் தேர்வுகள் பிரிவின் கீழ், அரசு தேர்வுகளான SSC, Railway, Banking, UPSC, TNPSC, Defence, போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தமிழ்நாடு முழுவதும் சிறந்த முறையில் பயிற்றுவிக்கும் வகையில் இத்திட்டம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே துவங்கப்படவுள்ளது. இப்போட்டித் தேர்வு பிரிவில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்கள் போட்டித்தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் போட்டித் தேர்வு பிரிவு துவங்கப்படவுள்ளது.

இந்த தொடக்க விழாவிற்கு உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அரசு முதன்மை செயலர் உதயச்சந்திரன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா இளைஞர்களுக்கு ஊக்க உரை அளிக்க கலியமூர்த்தி (ஓய்வு) உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிகழ்ச்சியில் சென்னையை சுற்றியுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள மாணவ மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

Tags : Minister ,Udhayanidhi Stalin , Minister Udayanidhi Stalin will start the free coaching classes for competitive exams under the 'I am the first' scheme tomorrow..!
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...