மாதவரம் வடக்கு திமுக சார்பில் 1000 பேருக்கு பிரியாணி நலத்திட்ட உதவிகள்: மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ வழங்கினார்

சென்னை: சென்னை வடகிழக்கு மாவட்டம், மாதவரம் வடக்கு பகுதி, 23வது வார்டு திமுக சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மாதவரம் வடக்கு பகுதி பிரதிநிதி புழல் ஜி.சிவகுமார் ஏற்பாட்டில், நேற்று புழல் மத்திய சிறைச்சாலை அருகே கட்சிக்கொடியேற்றி, 1000 பேருக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாதவரம் வடக்கு பகுதி செயலாளர் புழல் எம் நாராயணன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் சந்துரு, நிர்வாகிகள் மெட்ரோ எழில்குமார், மேக்சீலா உதயகுமார், ராஜாராம், விக்னேஸ்வரன், சரவணன், நெல்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ பங்கேற்று, கட்சிக்கொடியேற்றி 1000 பேருக்கு பிரியாணி வழங்கினார். இதில் வடக்கு பகுதி மற்றும் 23வது வட்ட நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதேபோல் மாதவரம் தெற்கு பகுதி, 31வது வார்டு திமுக சார்பில், புழல் சைக்கிள் ஷாப் அருகே ஜிஎன்டி சாலை அருகே முன்னாள் இளைஞரணி நிர்வாகி அன்பின் மகேஷ் ஏற்பாட்டில், வார்டு அவை தலைவர் கதிர் குமார் தலைமையில், 500க்கும் மேற்பட்ட மக்களுக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் மண்டல குழு தலைவர் எஸ்.நந்தகோபால், மாநகராட்சி கவுன்சிலர் சங்கீதா பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.மேலும், 24வது வார்டு முன்னாள் வட்ட செயலாளர் புழல் திருநாவுக்கரசு நினைவு கல்வெட்டு அருகே மற்றும் திருமூலநாதர்சாமி திருக்கோவில் அருகே, டாக்டர் அம்பேத்கார் தெரு ஆகிய பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந் நாளை முன்னிட்டு, வட்ட அவைத்தலைவர் சி.ஜெ.ரவி தலைமையில் 300 பேருக்கு பிரியாணி மற்றும் நலத்திட்ட உதவிகளை மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: